நேசக்கரம் நீண்டுகிறார் சீ.வீ.கே.


தமிழர்களுடைய வரலாற்று உண்மையை கூறிய சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்வோம் என கூறுவது வேடிக்கையான விடயம் என சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுடைய பூர்வீகங்கள் எங்;கும் இந்து ஆலயங்கள் பரவிக்கிடக்கின்றன .இலங்கை பூராவும்; அதிலும் வடக்கு கிழக்கில் வரலாறுகள் கல்வெட்டுக்கள் பெருமளவில் காணப்படுகின்றன..

அதனைவிட 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஜே ஆர் ஜெயவர்த்தன -ராஜீவ்காந்தி ஒப்பந்தத்திலே வடக்கு கிழக்கு பிரதேசங்கள் தமிழ் பேசும் மக்களுடைய வரலாற்று ரீதியான வாழ்விடம் என்று இரண்டு அரசுகளாலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது .

எல்லாவல மேத்தானந்த தேரரை விட ஆயிரம் மடங்கு வரலாறு தெரிந்த ஜே ஆர் ஜெயவர்த்தன அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார்..

வரலாற்று ரீதியாக ஆவண ரீதியாக இந்த மண்ணிலேயே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு


சி.வி.விக்னேஸ்வரன் இதனையே தனது கருத்தாக தெரிவித்திருக்கின்றார் அவர் புதிதாக எதையும் இறக்குமதி செய்துகூறவில்லை அவர் வரலாற்றைத்தான் தெரிவித்திருந்தார் 


அதனை வைத்துக்கொண்டு சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் அவரது கடவுச்சீட்டைப் பறிக்கவேண்டும் என்று அச்சுறுத்தல்விடுதல் என்பது ஒரு வேடிக்கையான விடயமாக காணப்படுகின்றது 

கிழக்கு மரபுரிமை செயலணிக்கு  ஒரு முக்கிய உறுப்பினராக மேதானந்த தேரர் உள்ளார்.   இனி வரும் காலங்களில் அவர் தமிழ் இந்துக்களுக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவாரோ என்ற கேள்வியும் எழுகின்றது எனவும் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.


No comments