திலீபனிற்கு சுடரேற்றினால் இனக்கலவரம் வருமாம்?


தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுக்க ஏற்கனவே யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அது கிளிநொச்சிக்கும் சென்றுள்ளது.

குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை 106ம் பிரிவின் பிரகாரம் தியாகி திலீபன் நினைவு கூற மக்கள் பிரதிநிதியான தனக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நீதிமன்ற நீதிவானால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு கட்டளையிடப்பட்டது.

ஏனைய நீதிமன்றங்களை தாண்டி கிளிநொச்சி நீதிமன்றமோ திலீபனிற்கு சுடரேற்றி


அஞ்சலிப்பதன் மூலம் இலங்கையில் இனக்கலவரம் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments