தடை உறுதி:கைவிட்டது நீதிமன்றம்?

 


தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னெடுக்க யாழ்.நீதிவான் நீதிமன்று மீண்டும் தடை விதித்துள்ளது.

ஏற்கனவே நீதிமன்றினால் நினைவேந்தலிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

மேன்முறையிட்டின் மீதான  விசாரணையின் பின்னராக தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் உறுப்பினரை நினைவு கூர முடியாதென தெரிவித்து நீதிமன்று தடையை உறுதிப்படுத்தியுள்ளது.

இதனிடையே இன்றைய தினம் முதல் நினைவேந்தல்  வார நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், குறித்த நினைவேந்தல் நிகழ்வினை நடத்த நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவினர் யாழ்.நீதவான் நீதிமன்றில் தடையுத்தரவை பெற்றிருந்தனர்.


இந்நிலையில் தடைகளை தாண்டி எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய தினம் காலை தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


உரும்பிராய் பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


No comments