தீர்க்கமான நடவடிக்கையில் சசிகலா ரவிராஜ்?

சசிகலா ரவிராஜ் தோற்கடிக்கப்பட்ட விவகாரத்தில் அவர் தீர்க்கமா நடவடிக்கைகள் சிலவற்றில் தமிழரசு கட்சி தலைமையுடன் இணைந்து ஈடுபடவுள்ளமை தெரியவந்துள்ளது.இன்றிரவு கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவை மீண்டும் அவரது காங்கேசன்துறை வதிவிடத்தில் அவர் சந்தித்தார்.

ஏற்கனவே தன்னை கட்சி தலைமையில் இருந்து தூக்கும் சுமந்திரன் -சிறீதரன் சதி காரணமாக சீற்றங்கொண்டு;ள்ள மாவை சசிகலா நடவடிக்கைக்கு தோள் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

இதனிடையே மாமனிதர் ரவிராஜின் மனைவியார் சகிகலாவுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால், அதற்கு எதிராகத் தாம் கட்சி பேதங்களின்றி ஒத்துழைக்கத் தயார் என சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்டதில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள அங்கஜன் இராமநாதன் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பாகப் போட்டியிட்ட சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி ஆகியோர் உறுதியளித்துள்ளனர். 

இன்று (08) சகிகலா ரவிராஜின் வீட்டுக்குச் சென்ற குறித்த மூவரும், குறித்த சம்பவம் குறித்து ஆலோசித்தனர்.

பின்னர், இதுகுறித்து தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிடுவது மற்றும் நீதிமன்றை நாடுவது குறித்தும் கலந்தாலோசித்தனர். 

அதேவேளை, குறித்த விருப்பு வாக்கு குளறுபடிகள் கிளிநொச்சி வாக்கெண்டும் நிலையத்தில் இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

திருமதி. சசிகலா இரவிராஜ் அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்து அவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்குமானால் நியாயம் கிடைக்கும் வரையில் அவருடன் கட்சிபேதமின்றி குரல் கொடுத்து முன்னிற்பேன் என உறுதி கூறினேன் என அங்கயன் இராமநாதன் தெரிவித்திருந்தார்.


No comments