பணத்தைக் கடத்த முற்பட்டவர் நாயிடம் சிக்கினார்

ஜேர்மனி பிராங்போட் வானூர்த்தி நிலையத்தில் €247,280 பயணித்த ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். குறித்த பணத்தை பயண விதிகளின் புறந்தள்ளி மறைத்து வெளிநாடு ஒன்றுக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட நபரை சுங்க அதிகாரிகளின் ஸ்னிஃபர் என்ற நாய் துல்லியமாக காட்டிக்கொடுத்துவிட்டது.

இதேபோன்று கடந்த யூன் மற்றும் யூலை மாதங்களில் பணங்களை மறைத்து எடுத்துச் சென்ற  12 நபர்களை அகி என்று பெயரிடப்பட்ட மாலினாய்ஸ் பூச் என்ற நாய் அவர்களின் இரகிய இடங்களை இனங்காட்டி உதவி செய்திருந்தது. அவ்வாறு மறைத்து சட்டைப் பையில் எடுத்துச் செல்லப்பட்ட ஒருவரிடம் €52,000 களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

குறிப்பாக ஐரோப்பா இருக்கும் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பயணிக்கும் போது நபர் ஒருவர் €10,000 வரையே எடுத்துச் செல்ல முடியும் அதற்கு மேல் கொண்டு செல்ல வேண்டும் என்றால் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்பது சட்டவிதியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments