தெதர்லாந்தில் மிகப்பொிய கொகேய்ன் ஆலை கண்டுபிடிப்பு

தெதர்லாந்தில் மிகப்பொிய கொகேய்ன் ஆலை ஒன்றை நெதர்லாந்துக் காவல்துறையினா கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியபோது முன்னர் பயன்படுத்திய தொழுவம் ஒன்றில் காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்திய போதே இந்த ஆய்வகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சோதனை நடவடிக்கையின் போது 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெதர்லாந்தில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய கொகேயின் ஆலை இதுவாகும் என காவல்துறைத் தலைவர் ஆண்ட்ரே வான் ரிஜ்ன் கூறினார்.

ஒரு நாளைக்கு 150 கிலோ தொடக்கம் 200 கிலோ வரை கோகோயின் உற்பத்தி செய்ய முடியும். நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் கொக்கேயின் விலை 4.5 மில்லியன் ஈரோக்கள் என மதிப்பிடப்பிடப்பட்டுள்ளது என நேற்று காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 கிலோ கொகேய்ன், கொகேய்ன் தாயாரிக்கும் உபகரணங்கள், பல்லாயிரக்கணக்கான இரசாயணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மத்திய நகரமான அபெல்டூரில் கொள்கலன் வாகனம் ஒன்றில்  ஒன்றில் ஒரு முறை இரசாயண செயல்பாட்டில் அகற்றப்பட்ட கொகேய்ன் ஆடை 120 தொன்கள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிஜவீனில் உள்ள முன்னாள் தொழுவத்தில் சந்தேகநபர்களில் 16 பேரை அதிகாரிகள் கைது செய்தனர் அவர்களில் ஒருவர் அந்த இடத்தின் உரிமையாளர். 17 வது சந்தேக நபர் அப்பெல்டூனில் கைது செய்யப்பட்டார். 

சந்தேக நபர்களில் பெரும்பாலோர் கொலம்பிய கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

சந்தேச நபர்கள் இன்று புதன்கிழமை அல்லது நாளை வியாழக்கிழமை நீதிமன்றம் முன் காவல்துறையினர் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.


No comments