அடித்தால் திருப்பி அடிப்போம்: சிவாஜி!

 


தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகப் போராடும் எம்மீது அடக்குமுறைகளை பிரயோகித்தால் அவர்கள் பிரயோகிக்கும் அடக்கு

முறைகளுக்கு அதே பாணியில் பதில் சொல்லத் தயங்க மாட்டோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆவேசமாக தெரிவித்தார்

யாழ் ஊடக அமையத்தில் 14  வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது செஞ்சோலை நினைவேந்தல் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கே இவ்வாறு பதிலளித்தார் 

அவர் மேலும் தெரிவிக்கையில் 61 உயிர்களை காவு கொண்ட செஞ்சோலை படுகொலை தினமானது இன்று (14/8) கிளிநொச்சியில் செஞ்சோலை முகவாயிலில் அனுஷ்டிக்கப்பட இருந்த நிலையில் பாதுகாப்பு தரப்பினர்கள் அதனை தடுக்கும் முகமாக அச்சுறுத்தல் விடும் பாணியில் நடந்து கொண்டார்கள்

நானும் எனது குழுவினரும் குறித்த அஞ்சலி செலுத்துவதற்காக சென்றிருந்த சமயம் பொலிஸார் எம்மை குறித்த இடத்தில் நிகழ்வு நடத்த முடியாது எனவும் இது தமது மேலிடத்து உத்தரவு எனவும் கூறிஎமது  நிகழ்வை தடுப்பதற்கு பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்தனர்

இலங்கை அரசாங்கத்தின் ஆகாய விமான குண்டுவீச்சு தாக்குதலில் உயிரிழந்த எமது உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தவே நாம் இங்கு வந்தோம் எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதை எந்த மேலிடத்தாலும்  தடுக்க முடியாது எனவும் எத்தகைய சவால்  வந்தாலும் எமது காரியத்தை முடிப்போம்   எனக் கூறி நமது அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்தோம் சில தேசியம் பேசும் கட்சியினர் செஞ்சோலை நிகழ்வை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள்

எமது உறவுகள் அழிக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்துவது எமது இனத்தின்  அடையாளத்தையும் உயிர் நீத்த உறவுகளின் ஆத்மாவுக்கும் ஆறுதலாக இருக்கும் என கருதிய படியால் நான் அவ்விடத்திலேயே நிகழ்வை செய்தேன்

தமிழ் தேசியம் பேசுபவர்கள் கட்சி வேறுபாடு இன்றி யாராவது குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தால் நானும் சென்று அவர்களுடன் கலந்து கொண்டிருப்பேன் ஆனால் எவரும் குறித்த இடத்தில் இந்த நிகழ்வை செய்வதற்கு ஒருவரும் முன் வராத காரணத்தால் குறித்த நிகழ்வை நாம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது

ஜனாதிபதி ஹோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் உள்ள நிலையில் தமிழ் மக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ள நிலையில் கட்சி பேதங்களுக்கு அப்பால் தமிழ் மக்களுடைய பொதுவான பிரச்சனைகளுக்காக ஒருமித்து குரல் கொடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments