நாட்டைவிட்டு வெளியேறும் ஸ்பெயின் முன்னாள் மன்னர்

ஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ் நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக அரண்மனை அறிவித்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளவுள்ள நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறவுள்ளார்.

ஸ்பெயினின் உச்சநீதிமன்றம் ஜூன் மாதத்தில் முன்னாள் மன்னரின் சட்டபூர்வமான பொறுப்பை தீர்மானிக்க ஒரு விசாரணையை அறிவித்தது. ஜுவான் கார்லோஸ் 2008 ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிக் கணக்கில் 85 மில்லியன் யூரோக்கள் ரகசியமாக சவுதி மன்னரால் வைப்பிலிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் 82 வயதான அவர் தனது மகனை எழுதிய கடிதத்தில் நாட்டை விட்டு வெளியேறுவதாக வெளிப்படுத்தினார்.

அக்கடித்தத்தில்:-

ஸ்பெயினின் மக்களுக்கும், அதன் நிறுவனங்களுக்கும், நீங்கள் ராஜாவாகவும் சிறந்த சேவையைச் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையால் வழிநடத்தப்பட்டு, ஸ்பெயினுக்கு வெளியே நாடுகடத்தப்படுவதற்கான இந்த முடிவை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

இது ஆழ்ந்த வேதனையுடன் நான் எடுக்கும் முடிவு, ஆனால் மிகுந்த மன அமைதி எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்பெயினில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

No comments