மீண்டும் களத்திற்கு வந்தார் தோழர்?


ஆட்சி கதிரையில் தமக்கான ஆட்கள் பதவிக்கு வந்தால் கொல்லன் இரும்பை கண்டால் எதனையோ தூக்கி தூக்கி அடிப்பது போல கொண்டாடுவது சிலரது வழமையாகும்.புலிகளது காலத்தில் போராட்டத்தை தூக்கி திரிந்ததாக சொல்லிக்கொள்பவர் ஈபிடிபியின் றுசாங்கன் கோடீஸ்வரன்.

தேர்தல் காலத்தில் சுதந்திரக்கட்சி முதல் டக்ளஸ் வரையாக புலி அரசியலை வைத்து அல்லது அமத்தி வாசித்து ஒரிரு கதிரைகளை பெற்றிருப்பது தெரிந்ததே.

கூட்டமைப்பின் புலி நீக்க அரசியலிற்கான மக்களது எதிர்வினையாக்கல்  மற்றும் சலுகை அரசியல் பற்றிய இளம் சமூகத்திற்கான குழையடிப்புக்கள் மத்தியில் ஒரு சில ஆசன வெற்றியை தமிழ் தேசியம் தோற்கடிக்பட்டுவருவதாக கொண்டாட டக்ளஸ் ஆதரவு இத்தகைய கும்பல்கள் முற்பட்டுள்ளன.

தமிழ்த் தேசிய ஆதரவு வாக்குகளின் கிட்டத்தட்ட 16 சதவீதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கடந்த மாற்றுத் தரப்புக்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக படங்களுடன் புதிய விளக்கமெழுத தொடங்கியிருக்கின்ற இத்தகைய தரப்புக்கள் அவர்களது புதிய விளக்கத்தில் தமிழ்த் தேசியத்துக்கு மாற்றாக, புதிய செல்நெறிக்கான வாக்குவீதம் அதிகரித்திருப்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.

1947இல் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் கடந்த 70 வருடங்களாக கோலோச்சிய தமிழ்த் தேசிய ஆதரவு வாக்குகள் படிப்படியாக, சாத்தியமான வழிமுறைகளில் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டபடி, அபிவிருத்தியுடன் கூடிய உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறையை நோக்கி மாறிவருதை  காட்டுகிறது.


தமிழ்த் தேசியத்துக்கு மாற்றான, நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளை வழிமொழியும் தரப்புக்கள் சரியான முறையில் செயற்பட்டு, இந்தத் தரப்புக்களின் கோரிக்கைக்கு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிபீடமேறியிருக்கும் ஜனாதிபதியும், பிரதமரும் உரிய கரிசனையைக் காட்டுவார்களாயின்,0 வருடங்களுக்கு மேற்பட்ட தமிழ்த் தேசிய மாயையிலிருந்து தமிழர்கள் விடுபட்டு, இலங்கைத் தேசியத்துக்குள் இரண்டறக் கலக்கும் நிலை படிப்படியாக உருவாகும் என இத்தரப்புக்கள் விளக்கு பிடிக்க தொடங்கியுள்ளன.


No comments