பெண்களை சுயாதீனமாக விடுங்கள்:சசிகலா?


கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ்  "பெண்களின் அரசியல் பிரவேசம் அவசியம் என்பவர்கள் அவர்களை சுயாதீனமாக இயங்க அனுமதிக்க வேண்டும்" என கூறியிருக்கிறார். 


இதனிடையே ஒருவேளை இதே பகுதியில் தீவிர பிரசாரம் செய்துகொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான உமாச்சந்திரா க்கு வழங்கப்படும் சுதந்திரத்தில் ஐந்து சதவீதமேனும் தனக்கு வழங்கப்படவில்லை என சசிகலா நினைத்திருக்கலாம். எனக்கு உமாவுடன் அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துவேறுபாடுகள் இருப்பினும், அவர் இன்று அரசியலில் தனக்கென்று பெற்றுக்கொண்ட நிலை ஏதோ திடீரென்று கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியதல்ல. 

அதைப் பெறுவதற்கான கடின உழைப்பும் திட்டமிடலும் அவரிடம் ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது. சரியோ தவறோ தனக்குக் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தனக்குச் சாதகமாகவே பயன்படுத்திப் பயணித்துக் கொண்டிருக்கிறார். தமிழரின் பிரதான கட்சிகளின் பெண் வேட்பாளர்களின் சில சிறுபிள்ளைத்தனமான கருத்துகளைப் பார்த்தால் உமாவின் திறமை அரசியலில் ஏனைய பெண்களுக்கு வரவே இன்னும் பல காலமெடுக்கும் போலிருக்கிறது.அரசியல் என்பது பெண்களுக்கு மிகவும் சவாலான விடயம் என்பது உண்மைதான் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார் சசிகலா என உமா நன்றி தெரிவித்துள்ளார்.

No comments