சட்ட அறிவுறுத்தல்களை மீறி மண் அகழ்வு! உழவூர்தியுடன் ஒரு கைது!

மட்டக்களப்பு -  வவுணதீவில்  மண் ஏற்றுவதற்காக அனுமதிப் பத்திரம் இருந்தும் சட்ட அறிவுறுத்தல்களை  மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட  உழவூர்தியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு  இலுப்படிச்சேனை - காலபோட்டமடு பிரதேசத்தை அண்டிய பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இக்கைது நடைவடிக்கை இடம்பெற்றது.

கைப்பற்றப்பட்ட  உழவூர்தியையும் சந்தேக நபரையும் சட்ட நடவடிக்கையின் பொருட்டு இன்று செவ்வாய்கிழமை (07ம் திகதி) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிககைகளை மேற்கொண்டுள்ளனர் காவல்துறையினர்.

No comments