அங்கஜனா கட்டித் தந்தது!! அப்ப பொதுமக்களின் பணம் எங்கே ஐயா?

வடமராட்சி வதிரி மேற்கில் அமைந்துள்ள பொம்மேர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் ஒன்றைச் சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கட்டித் தந்ததாக  அங்கஜனுக்கும் அவர் கட்சி சார்பில் போட்டியிடும் பாலகிருஷ்ணன் முகுந்தன் என்பவருக்கும் வாக்கும் கேகரிப்பதற்காகப் போலியான செய்தியை காணொளிப்பதிவு ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளார் மகிழ்ராஜன் மதன்.
கறுப்பு நிற மேற்சட்டை அணிந்தவரே மகிழ்ராஜன் மதன்

உண்மையில் அக்கட்டிடத்தை நிர்மாணிப்தற்கு அங்கஜன் 16 இலட்சம் ரூபாக்களை வழங்கியிருந்தார். ஆனால் கட்டிடம் கட்டி எழும்பி அரைவாசியில் அங்கஜனால் கைவிடபட்ட நிலையில் குறித்த கட்டிடத்தை வதிரியைச் சேர்ந்த உள்ளூர் மற்றும் புலம்பெயர் வாழ் மக்கள் தனிப்பட்ட முறையில் இக்கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு 15 இலட்சம் ரூபாக்கள் வரை நன்கொடையாக வழங்கியிருந்தார்கள். 

ஆனால் அந்த ஊர் மக்கள் வழங்கிய பல இலட்சம் ரூபாக்களை இருட்டடிப்புச் செய்துவிட்டு முற்று முழுதாக அங்கஜன் இராமநாதன் தான் இக்கட்டிடத்தை கட்டடித்தந்ததாக மகிழ்ராஜன் மதன் என்பவரும் அவருடன் சேர்ந்த நண்பர்களும் கூறியிருப்பது கண்டிக்கத் தக்கது. 
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம்

மக்கள் முன் உண்மைகளை மூடிமறைத்து சுதந்திரக்கட்சியின் வேட்பாளர்களான அங்கஜன் மற்றும் முகுந்தன் போன்றோருக்கு வாக்குகளை அந்த ஊரில் அறுவடை செய்வதற்கு இப்போலித்தனமான செய்திகளை பரப்புவதற்கு காரணமாக பின்புலத்தின் செயற்பட்ட பாலகிருஷ்ணன் முகுந்தன் தனது மருமகனான மகிழ்ராஜன் மதன் ஊடாக செய்தியைக் கசிய விட்டுள்ளமை தற்போது மக்கள் மத்தியில் அம்பலமாகியுள்ளது.
வதிரி பொம்மேர்ஸ் விளையாட்டு கழகத்தின் விளையாட்டு மைதானம்

இவ்வாறு பொதுமக்களின் பங்களிப்புடனும் கட்டி எழுப்பப்படும் அபிவிருத்திகளை அரசியல் வாதிகள் முழுமையாக உரிமை கோருவது எந்தளவு நியாயம் என கேள்விகள் எழுந்துள்ளன.

மக்களுக்கு சேவை செய்வோர் உண்மையாகவும், நேர்மையாகவும், கை சுத்தமாகவும், இருப்பது அவசியம் என அந்த ஊர் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். 
சுதந்திரக்கட்சியின் வேட்பாளர்கள் பாலகிருஷ்ணன் முகுந்தன்

சுதந்திரக்கட்சியின் வேட்பாளரான பாலகிருஷ்ணன் முகுந்தன் என்பவர் பொம்மேர்ஸ் விளையாட்டுக் கழகத்தை வளர்ச்சி அடையச் செய்யவதாக உறுதி மொழி வழங்கி செயலாளர் பதவியை ஏற்றபின் அதன் ஆயுட்காலம் முடிவடைந்த பின்னரும் அப்பதவியிலிருந்து விலகமாட்டேன் என அடாவடித்தனமாக அப்பதவியை தொடர்ந்து கையகப்படுத்தி வைத்துள்ளார்.

ஆளும் சிங்கள ஆட்சியாளர்களின் உதவியுடன் மக்களை ஏமாற்றியும் மிரட்டியும் அப்பதவியை வைத்துள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

No comments