இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்! மீறுவோர் மீது £100

இன்று வெள்ளிக்கிழமை முதல் இங்கிலாந்தில் வணிக முகக்கசவம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

பல்பொருள் அங்காடிகள், உட்புற பெருவணிக மையங்கள், போக்குவரத்து நிலையங்கள், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் உள்ளிட்ட மூடப்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 

விரைவு உணவகங்களில் (takeaway) உணவு மற்றும் பானங்கள் வாங்கும் போது முகக் கவசங்கள் அணிவது கட்டாயம். ஆனால் அவற்றை இருக்கைகளில் அமர்ந்து உண்ணும் போதும், அருந்தும் போதும் முகக்கவசங்கள் அகற்றலாம்.

இந்த விதிமுறையை மீறுவோர் மீது £100 வரை காவல்துறையினரால் தண்டணைப் பணமாக அறிவிடப்படும்.

முகக்கவசங்களை அணியாத வாடிக்கையார்களை வணிக நிலையங்களிலிருந்து அகற்றுவதற்கு காவல்துறையிர் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும். அத்துடன் அவர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்கவும் முடியும்.

11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இப்புதிய விதிமுறைகளில் விலக்கு உள்ளன.

குழந்தைகள், குறைபாடு உள்ளவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள், மூச்சுத் திணறல் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவது கடினம். அணிந்தால் அவர்கள் அபாயத்தை எதிர்கொள்ள நோிடும். குறிப்பாக மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது என இங்கிலாந்தின் பொது சுகாதாரத்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது.

வணிக நிலையங்களில் வேலை செய்வோர் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை. தேவையான இடத்தில் தங்களது பணியாளர்கள் அவற்றை பயன்படுத்தி கொள்வது பற்றி கடை உரிமையாளர்கள் முடிவு செய்ய வேண்டும் என அரசின் பரிந்துரை தெரிவிக்கின்றது.

சட்டத்தைப் பின்பற்ற வாடிக்கையாளர்களுக்கு வணிக நிலையங்கள் ஊக்குவித்தாலும், முகக்கவசம் அணிவது ஒவ்வொரு தனிமனிதர்களின் பொறுப்பு என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

செய்ன்ஸ்பரி மற்றும் கோஸ்ரா காபி நிறுவனங்கள் கடைகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்களை முக்கவசங்களை அணியுமாறு வற்புறுத்தமாட்டோம் என அறிவித்துள்ளது.

அஸ்டா புதிய விதிமுறைகளை அமுலாக்குவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பு எனக் கூறியுள்ளது.

நுழைவாயிலில் வாடிக்கையாளர்களுக்கு புதிய விதியை நினைவூட்டுவதாக வெய்ட்ரோஸ் கூறியுள்ளது.

கிரெக்ஸ் மற்றும் மெக்டொனால்ட்ஸ் டேக்அவே வாடிக்கையாளர்கள் முகமூடிகளை அணிய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஏற்கனவே பொதுப் போக்குவரத்துகளில் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம் என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

ஆனால் நூலகங்கள், பதிவு அலுவலகங்கள் போன்ற வேறு சில மூடப்பட்ட இடங்களில் என்ன செய்யவேண்டும் என்ற குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவர பொதுமக்களுக்கு தெளிவு தேவை எனவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

No comments