முகக்கவம் கட்டாயமாகின்றது! தவறியவர்களுக்கு £100 வரை அபராதம்!

இங்கிலாந்தில் உள்ள வணிக நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் முகக்கவசம் அணிவது ஜூலை 24 முதல் கட்டாயமாகின்றது. புதிய விதிகளை பின்பற்றத் தவறியவர்களுக்கு £100 வரை தண்டணைப்பணம் காவல்துறையினரால் அறவிடப்படவுள்ளது என்று அரசாங்கம் அறிவிக்க உள்ளது. 14 நாட்களுக்குள் மக்கள் தண்டணைப் பணத்தினைச் செலுத்தினால் இது £50 ஆகக் குறைக்கப்படும்.

யாருக்கும் முகக்கவசம் அணிவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருப்பின் (சுவாசிப்பதில் சிரமம்) அதை காவல்துறையினர் உறுதி செய்வார்கள்.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து இப்புதிய நடைமுறை வருகின்றபோதும் ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஜெர்மனி போன்ற பிற முக்கிய ஐரோப்பிய நாடுகளில் குறித்த விதிமுறை அமுலில் உள்ளது.

கடந்த மே மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து பொதுமக்கள் மூடப்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

ஜூன் 15 முதல் பொதுப் போக்குவரத்தில் இது கட்டாயமாக்கப்பட்டது.

சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் நாளை செவ்வாய்க்கிழமை முகக்கவசம் அணிவது குறித்த புதிய வழிகாட்டலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பாக மக்கள் வணிக நிலையங்களுக்குச் சென்று திரும்ப ஊக்குவிக்கப்படுகின்றது.

No comments