மகிந்தவை வெல்ல வைக்க ரணில் பாடுபடுகின்றார்?


மகிந்த கட்சியின் வெற்றிக்காக ரணில் தரப்பு பாடுபடுகின்றதென தான் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஜக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிறேமதாசா.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கேள்வி ஒன்றிற்கு  பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

ஏதிர்வரும் தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தி மிகப்பெரிய வெற்றியை பெறும்.
நாங்கள் எமது அமைச்சரவையினை ஓகஸ்ட் 25ம் திகதி அமைப்போம்.

அப்போது ஆட்சி மாற்றத்தினால் இடைநிறுத்தப்பட்ட வீடமைப்பு திட்டமுள்ளிட்டவை முன்னெடுக்கப்படும்.

இந்த அரசு தனது தேர்தல் வெற்றிக்காக படையினரை பிரச்சாரங்களில் பயன்படுத்துகின்றது.

இவ்விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் சஜித் பிறேமதாச தெரிவித்திருந்தார்.

இதேவேளை தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலைகள் தொடர்பில் எமது ஆட்சியில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவருடன் வேட்பாளர்களான கணேஸ் வேலாயுதம்,உமா சந்திரபிரகாஸ் மற்றும் கிருபாகரன் ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர்.

இதனிடையே நேற்றைய தினம் முதல் யாழில் தேர்தல் பிரச்சாரங்களில் சஜித் தனது கட்சியினருடன் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments