2வது முடக்க நிலையைச் சந்தித்துள்ளது மெல்பேர்ண்!

ஆஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் கொரோனா தொற்று அதிகரித்ததைத் அடுத்து அந்நகரம் இரண்டாவது தடவையாகவும் முடக்க நிலையை எதிர்கொண்டுள்ளது.

மெல்போர்னில் ஐந்து மில்லியன் குடியிருப்பாளர்கள் அத்தியாவசிய காரணங்களைத் தவிர, ஆறு வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்படும்.

நகர்களைச் சுற்றி வளையம் அமைத்து வருவதாகவும், சோதனை நடவடிக்கைகளைச் செயல்படுத்த எப்போது வேண்டுமானாலும் காவல்துறையினர் தயாகராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன் தலைநகரான விக்டோரியா மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.

No comments