அமைச்சரவைக் கூட்டத்தில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார் ஜவரி கோஸ் நாட்டின் பிரதமர்

ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி அமைச்சரவைக் கூட்டத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்.

61 வயதான இவர் அக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆளும் கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அலசேன் ஓட்டாரா மூன்றாவது முறையாக பதவியில் இருக்கப் போவதில்லை என்று கூறியதையடுத்தே அவர் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

கடந்த வியாழக்கிழமை பிரான்சில் இருந்து திரும்பியிருந்த கோன் கூலிபாலி, அங்கு அவர் இரண்டு மாத இதய சிகிச்சையைப் பெற்றிருந்தார்.

நாடு முழுவதும் துக்கத்தில் இருப்பதாக ஜனாதிபதி ஓட்டாரா கூறினார்.

கோன் கூலிபாலி வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் இறந்துவிட்டார்.

அவரது மரணம் தேர்தலில் பெரும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது.

கோன் கூலிபாலி 2012 ஆம் ஆண்டில் இதய மாற்று அறுவை சிகிச்சையைப் பெற்றார் மற்றும் ஒரு ஸ்டென்ட் செருகுவதற்காக மே 2 அன்று பாரிஸுக்குச் சென்றார்.

கடந்த வியாழக்கிழமை அவர் திரும்பினார் எங்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் கட்டியெழுப்புவதற்கும் பணியைத் தொடர நான் ஜனாதிபதி அருகே திரும்பி வருகிறேன் எனக் கூறியிருந்தார் என்பது நினைவூட்டத்தக்கது.

No comments