இலங்கையில் 2730?


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2730 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்று (20) 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இறுதியாக தொற்று உறுதியான 6 பேரில் 5 பேர் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றையவர் கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தொற்று உறுதியானவருடன் தொடர்பினை பேணிய ராஜாங்கனை பகுதியை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் 678 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதுவரை 2041பேர் குணமாகியுள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெலிசறை கடற்படை முகாமில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட இறுதி மூன்று கடற்படை வீரர்களும் குணமடைந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளான 906 கடற்படை வீரர்கள் தொற்றிலிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர், கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

No comments