கோத்தாவை காப்பாற்றினேன்:விஜயதாச?


ரணில்-மைத்திரி தலைமையிலான கடந்த நல்லாட்சி அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய முயற்சித்தபோது, அவரை தாமே காப்பாற்றினார் என முன்னாள் நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதனூடாக தாம் ஒருபோதும் சட்ட அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யவில்லை என்றும் அவர் நியாயம் தெரிவித்தார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (16) பகல் விஜயம் செய்ய முன்னாள் நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ச அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மொட்டுக் கட்சியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் அவர், தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டு வெற்றிக்கான ஆசியையும் பெற்றார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கும் அவர் கருத்து வெளியிட்டார்.
இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

No comments