அமெரிக்க கடற்கலத்தை தாக்கி அழிக்கும் கடற்பயிற்சியில் ஈரான்!

வளைகுடா ஹார்முஸ் கடலில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வரும் இந்த  நேரத்தில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் 14 என்று பெயரிடப்பட்ட இந்த பயிற்சிகள் ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.

அமெரிக்கா வழக்கமாக வளைகுடாவில் பயணிக்கும் விமானம் தாங்கிக் கப்பலை போலவே போலி கப்பலை வடிவமைத்து அதன் இருபுறமும் போலி போர் விமானங்களை வைத்து ஈரான் இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளது.

போலி கப்பலை சுற்றி பல்வேறு கோணங்களில் இருந்து ஏவுகணைகளை ஏவி பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது, அவற்றில் சில கப்பலில் இருந்த போலி விமானங்களை குறிவைத்துள்ளன.

ஈரான் ஹெலிகாப்டரில் இருந்து சுடப்பட்ட மற்றொரு ஏவுகணை போலி போர்க்கப்பலின் ஒரு பக்கத்தைத் தாக்கியது.

இதன் ஒரு பகுதியாக நிலத்தடி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியும் சோதனை நடத்தியது 

இந்த பயிற்சி ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க படைகள் எச்சரிக்கையுடன் இருக்க வழிவகுத்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

No comments