70 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனின் படிமங்களை கண்டுபிடிப்பு

அர்ஜென்ட்டினாவில் பட்டகொனியா பகுதியில் டைனோசர் காலத்து மீனின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

70 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த படிமங்களை கடந்த திங்கட்கிழமை கண்டுபிடித்துள்ளனர் என அறிவித்துள்ளனர்.

ஆறு மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள ஒரு வேட்டையாடும் மீனின் எச்சங்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞான இதழான அல்கெரிங்காஆன் ஆஸ்ட்ராலேசியன் ஜர்னல் ஆஃப் பாலியான்டாலஜி வெளியிடப்பட்டது.

தலைநகர் புவெனஸ் அயர்ஸிலிருந்து தெற்கே 1,400 கிலோமீட்டர் தொலைவில் "கூர்மையான பற்கள் மற்றும் பயமுறுத்தும் தோற்றம் கொண்ட இந்த மாமிச விலங்கின் புதைபடிவங்கள் கோல்ஹூ ஹுவாபியல் ஏரிக்கு அருகில் காணப்பட்டன.

இப்புதைபடிவமானது பூமியின் வரலாற்றில் இருந்த மிகப்பெரிய மீன்களில் ''ஜிபாக்டினஸ்'' இனத்தைச் சேர்ந்தது.

மீனின் உடல் குறிப்பிடத்தக்க மெலிதானது மற்றும் பெரிய தாடைகள் மற்றும் பற்கள் ஊசிகளைப் போல கூர்மையானதும் நீளமான பொிய தலையையும் கொண்டது.

No comments