வாகன விபத்து! முதியவர் படுகாயம்!

நல்லூர் கோவில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கோவில் வீதியில் தரித்து நின்ற வாகனத்தில் இருந்து ஓட்டுநர் கதவைத் திறந்து கீழிறங்க முன்பட்டபோதே உந்துருளியில் வந்த வாகனத்தின் கதவில் மோதி விபத்துக்குள்ளானார்.

படுகாயமடைந்தவர் 60 வயது மதிக்கத்தக்கவர் என கூறப்பட்டுள்ளது. தலையில் பலத்த காயங்களுடன் முச்சக்கர வண்டியில் ஏற்றப்பட்டு மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தார்.

No comments