கிளிநொச்சியில் விபத்து! இளைஞன் பலி!

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இன்று மாலை  இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

உந்துருளி விபத்தில் கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே பலியாகியுள்ளார். உந்துருளியின் பின் இருக்கையில் காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். 

உந்துருளி வேக கட்டுப்பாட்டை இழந்ததால் வீதியின் அருகே இருந்த நாவல் மரத்தில் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றிருந்தது.

சடலம் தற்போது அக்கராயன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

No comments