முன்னணி அலுவலகம் முற்றுகைக்குள்?


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகம் இராணுவ மற்றும் காவல்துறை முற்றுகைக்குள் உள்ளாகியுள்ளது.

கொக்குவிலில் அமைந்துள்ள அதன் தலைமையத்தில் தேர்தல் பரப்புரைகள் தொடர்பிலான சந்திப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கு காவல்துறை மற்றும் படையினர் குவிக்கப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையகம் சுற்றிவளைக்கப்பட்டமை அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

No comments