வடக்கு துப்பாக்கி தெற்கில் ?


வடக்கிலிருந்து இடமாற்றம் பெற்றுச்சென்றிருந்து பொலிஸ் அதிகாரியொருவர் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த நிலையில் கைதாகியுள்ளார்.

ஹோமாகம பிட்டிபன பிரதேசத்திலுள்ள பொலிஸ் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த அதிகாரியொருவரே ரீ - 56 ரக துப்பாக்கிகள் இரண்டுடன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் பிட்டிபன பிரதேசத்தில் விசேட அதிகரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளுடன் மேற்படி அதிகாரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாகிகளுக்கும் தொடர்பிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. 

மேற்படி துப்பாக்கிகள் பயங்கராவாத் செயற்பாடுகளுக்கு உதவுவதற்கான கொண்டுவரப்பட்டுள்ளனவா என்ற போர்வையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி மேற்படி சந்தேக நபர் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். 
முன்னதாக வடக்கில் பணியாற்றியிருந்த நிலையில் ஆயுதங்கள் வடக்கிலிருந்து கொண்டு செல்லப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

No comments