தெற்கில் மகிந்த-சஜித்:வடக்கில் கஜன்-சுமா?


இலங்கையின் பொருளாதாரத்தில் வெற்றிப்பெரும் வேலைத்திட்டம் தொடர்பில் தம்முடன் பகிரங்க விவாதமொன்று வருமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.


இதனிடையே வடக்கில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்  வேட்பாளர்களாகிய  என். சிறீகாந்தாவுடனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனும் பொதுவெளியில் பகிரங்க விவாதம் நடாத்துவதற்கு தான் தயாராக உள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்துள்ளார்.

பொதுவெளியில் நடுநிலையான நபர் ஒருவரின் முன்னிலையில் விவாதம் செய்வதற்கு நான் தயார். அதனை யாராவது ஒழுங்கமைப்புச் செய்தால் அல்லது சிறீகாந்தாவே ஒழுங்கமைத்தால் கூட பரவாயில்லை எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதே வேளை கஜேந்திர குமார் பொன்னம்பலத்துடன் ஏற்கனNவு நான்கு தடவைகள் விவாதித்திருக்கின்றேன். விவாதத்திலிருந்து தப்பிப்பதற்காக நொண்டி சாட்டுக்களை கூறிக்கொண்டு  அவர், ஓடுகிறார். அவரைத் துரத்திப் பிடிக்கும் அவசியம் எனக்கில்லை. ஆனால், அவருடனும் விவாதிக்க நான் தயாராக உள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிறீகாந்தா எம்.ஏ.சுமந்திரனை பகிரங்க விவாதத்திற்கு அழைத்திருந்தார்.ஆயினும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ கூட்டமைப்பில் தற்போது அதிகாரமற்றிருக்கின்ற எம்.ஏ.சுமந்திரனுடன் விவாதிக்க தயாராக இல்லையென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments