சாரதி அனுமதிப்பத்திரமும் ஆமியிடமாம்?


சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என அரச தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.


பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருடன் நடந்த கலந்துரையாடலின்போது, இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டதாக போக்குவரத்து துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் வருடம் முதல் இந்த நடவடிக்கை இராணுவத்தினரிடம் ஒப்படைப்படவுள்ளது.

வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரித்து வழங்கும் நடவடிக்கையை தனியார் நிறுவனத்திடம் வழங்கியுள்ளதால் பெரும் தொகையை செலுத்தப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தணிக்கை அறிக்கையின்படி, 2009 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் அந்த தனியார் நிறுவனத்திற்கு ரூ.7,467.65 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளது, மேலும் ஒப்பந்தம் காலாவதியான பிறகு, மார்ச் 2016 முதல் டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதியில் மேலும் ரூ.1,856.65 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மிகக்குறைந்த செலவில் வாகனசாரதி அனுமதிப்பத்திரத்தினை இராணுவத்தினால் தயாரிக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்

No comments