தரகர்கள் இனி தேவையில்லை:கணேஸ் வேலாயுதம்!


கூட்டமைப்பாயினும் சரி ஏனைய கட்சிகளாயினும் சரி தேர்தலில் வென்றால் சஜித்துடன் இணைந்தோ பேசியோ தான் அரசியல் செய்யவேண்டும்.அவ்வாறாக  தரகர்களை தெரிவுசெய்வதை விட நேரடியாக எம்மை போன்றவர்களை தெரிவு செய்வதால் மக்கள் தமக்குரியதை அடையலாமென தெரிவித்துள்ளார் கணேஸ் வேலாயுதம்.


யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய் கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளரான அவர் மேலும் தெரிவிக்கையில் நடைபெறவுள்ள தேர்தலில் சஜித் தலைமையிலான தரப்பே வெற்றி பெறவுள்ளதாக கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் முன்னைய ரணில் அரசில் இணைந்து தமக்கு வருமானம் பார்த்துக்கொண்டும் பலாபலன்களை பெற்றுக்கொண்டிருந்த கூட்டமைப்பினரை தரகர்களாக தெரிவு செய்வதை விடுத்து நேரடியாக எம்மை போன்றவர்களை தெரிவு செய்ய முன்வரவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அரசியலில் மக்களிற்கு சேவையாற்ற வருபவர்கள் முதலில் முழுமையாக அப்பணியில் இணைய வேண்டும்.நான் அரசியலிற்காக அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு தற்போது வந்துள்ளேன்.

கூட்டமைப்பின் வசமுள்ள யாழ்.மாநகரசபையினை எடுத்துக்கொண்டால் அதன் முதல்வர் பதவி முற்று முழுதாக ஆற்றப்படவேண்டிய பதவியாகும்.

ஆனால் முதல்வராக இருந்த இமானுவேல் ஆனோல்ட் பகுதி நேரமாக முதல்வராக இருந்தார்.

இப்போது பகுதி நேரமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தேர்தலில் போட்டியிடுகிறார்.இத்தகையவர்களை  தெரிவு செய்து மக்கள் எதனையும் பெறமுடியாதெனவும் கணேஸ் வேலாயுதம் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் குறிப்பாக ஆனோல்ட் வீடு உள்ள குருநகர் பகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு நேற்று சென்றோம்.

ஆனால் அங்கு குப்பை கூழமாக மக்கள் வாழ்வதற்கு பொருத்தமற்றதாக நெருக்கடி மிக்க இடமாக அது காணப்பட்டது.

தான் மாநகர முதல்வராக இருந்து வந்த பகுதியை கூட துப்புரவாக்கவோ மக்கள் வாழ்வதற்கு ஏற்ற வசதிகளை கொண்டதாக சீரமைக்கவோ முடியாத ஆனோல்ட் போன்றவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க தகுதி கொண்டவர்களாவெனவும் கணேஸ் வேலாயுதம் கேள்வி எழுப்பினார். 

No comments