விபத்து! வவுனியாவில் ஒருவர் பலி!

வவுனியாவிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (28) ஓமந்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த உந்துருளியும் ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கிச் சென்றகொண்டிருந்த டிப்பர் வாகனமும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து வவுனியா – பறண்நட்டகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உந்துருளியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், நோயாளர்காவு வண்டிமூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் குடைசாய்ந்துள்ளதுடன், அதன் சாரதி சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார் என வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments