போட்டுதாக்கிய மகளிரணி?


யாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம் கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளது.


இன்றைய தினம் தமிழரசின் தலைமையை சேர்ந்த ஒரு சிலர் கனடா நிதியை சுருட்டியமை தொடர்பில் அம்பலப்படுத்திய மகளிரணியின் பத்திரிகையாளர் சந்திப்பை கண்காணிக்க இலங்கை தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் காவல்துறை சகிதம் பிரசன்னமாகியிருந்தனர்.

பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வருகை தந்த அதிகாரிகள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவிருந்த மகளிர் அணியை சேர்ந்தவர்கள் வருகை தரும் வரை காத்திருந்து அவதானித்து சென்றிருந்தனர்.

முறைப்பாடொன்றையடுத்தே தேர்தல் ஆணைக்குழு வரை கண்காணிப்பு பணிக்கு வருகை தந்ததாக தெரியவருகின்றது. 

ஆயினும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மகளிரணி தலைவியோ விளாசு விளாசிவிட்டே ஓய்ந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments