மரணம் பொய் செய்தி?


கிளிநொச்சியில் நேற்றிரவு காட்டு யானை தாக்கியதில் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.


கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பிரிவில் சேவையாற்றும் கொழும்பு களனிய பகுதியை சேர்ந்த காயத்திரி டில்ருக்சி என்ற 32 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், விரிவுரையாளர் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

விரிவுரையாளர் விடுதியில் தங்கியிருந்த இவரும் மற்றுமொருவரும் வணக்க ஸ்தலத்திற்கு சென்று திரும்புகையிலேயே, யானை இவர்களை துரத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்

No comments