ஒருவரையும் விடமாட்டேன்: எம்.ஏ.சுமந்திரன்?

தமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில்  தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.

கனடா காசு 22 கோடி ரூபாவுக்கு கணக்கு கேட்ட மகளிர் அணி தலைவி மீது ஆயிரம் கோடி ரூபா மானநஸ்டம் கோரி  வழக்கு தாக்கல் செய்ய ஏதுவாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன் என தெரிவித்துள்ள சுமந்திரன் அவரிற்கு பின்னால் இருந்து செயல்படும் ஆளுக்கும், அவர் கட்சியின் முக்கிய உறுப்பினராகவோ சக வேட்பாளாராகவோ இருக்கட்டும். அவருக்கும் வக்கீல் நோட்டிஸ் அனுப்புவேன் என எச்சரித்துள்ளார்.

எனினும் அவ்வாறு அவர் அடையாளப்படுத்திய நபர் மாவை சேனாதிராசாவா அல்லது சரவணபவனா அல்லது சித்தர்த்தனா என்பது தெளிவாகவில்லை.

இதனிடையே மான நஸ்ட வழக்கில் மகளிர் அணி தலைவி, நீதிமன்றத்தில்  உங்களுக்கு மானம் இருந்தால் தானே நஸ்டமாகிறதற்கென கேள்வி ; எழுப்பினால் எண்டு கேட்டால், தனக்கு மானம் இருக்கிறதென காண்பிக்க  என்ன ஆதாரம் வைத்திருக்கிறார் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

No comments