75 நகரங்களுக்கு பரவியது போராட்டம்! காவல்துறையினர் மீதும் துப்பாக்கிச் சூடு!

us unrest

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணத்தின் பின் ஏற்பட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் கடந்த ஒரு வாரமாகத் தொடர்கின்றன.

தற்போது குறித்த போராட்டமானது 75 நகரங்களில் பரவி வன்முறையகாக வெடித்துள்ளன.

மிசூரியின் செயின்ட் லூயிஸில் போரட்டத்தின போது நேற்ற திங்கள்கிழமை இரவு நான்கு காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த நான்கு காவல்துறையினரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.us unrest

காவல்துறை மா அதிபர் கேணல் ஜான் ஹேடன் ஜூனியர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்டு:-

அதிகாரிகள் மீதுகோழைத்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தாக்குதலில் காவல்துறையினர் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடவுளுக்கு நன்றி அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றார்.

No comments