இராணுவத்தை அனுப்புவேன்! மாநில அரசுகளுக்கு டிரம்ப் மிரட்டல்!

Donald Trump
ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்திற்கு எதிர்ப்புத் தெரிவத்து கடந்த ஒரு வாரமாக முன்னெடுத்து வரும் போராட்டங்களை மாநில மற்றும் நகர நிர்வாகத்தினர் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் இராணுவத்தினரை களத்திற்கு அனுப்புவேன் என அமொிக்க அதிபர் டொனால்ட் டிரம் மாநில அரசுகளை மிரட்டியுள்ளார்.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் உள்நாட்டு அமைதியின்மையைத் தணிக்க இராணுவத்தை அனுப்புவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

நகரங்களும் மாநிலங்களும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டால், குடியிருப்பாளர்களைப் பாதுகாக்க இராணுவத்தை நிலைநிறுத்திதப்படுவார்கள் எனவும் அவர்கள்பிரச்சினையை விரைவாக தீர்ப்பார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments