மாட்டுப்பட்டியைப் பார்க்கச் சென்றவர் பிணமாக மீட்கப்பட்டார்

batticalo
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேசத்தில் மாட்டுபட்டியை பார்க்க சென்ற விவசாயி ஒருவர் வயல் பகுதியில் யானைக்கு அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் தும்பங்கேணி, திக்கோடையைச் சேர்ந்த விவசாயியான 59 வயதுடைய சீனித்தம்பி சந்திரசேகரம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெல்லாவெளி, 39 ஆம் கொலனியில் உள்ள வயல் பிரதேசத்தில் வேளாண்மையை யானைகளிடம் இருந்து பாதுகாக்க சில விவசாயிகள் ஒன்றிணைந்து வயல் பகுதியில் திருட்டு மின்சாரம் பெற்று மின்சார வேலி அமைத்திருந்தனர்.

இந்த மின்சார வேலிப் பகுதியில் குறித்த விவசாயின் மாட்டுபட்டி மற்றும் விவசாயம் அமைந்திருந்த நிலையில் சம்பவ தினமான இன்று அதிகாலை 2 மணி அளவில் வீட்டில் இருந்து மாட்டுபட்டிக்கு சென்றிருந்த நிலையில் வயலை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலியின் முள்ளுக்கம்பியை பிடித்து மாட்டுபட்டிக்கு செல்ல முற்பட்டபோது மின்சார வேலியின் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments