பழிவாங்குவதில் மும்முரமாக கோத்தா?


ரணில் ஆதரவு தரப்புக்களை பழிவாங்க கோத்தபாய அரசு மும்முரமாகியுள்ளது.இந்நிலையில் கோத்தபாயவின் பினாமியான நிசாங்க சேனாதிபதி முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தன்னை படுகொலை செய்ய முயன்றதாக தெரிவித்துள்ளார்.

கோத்தபாயவின் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவராக நிசாங்க சேனாதிபதி செயல்பட்டு வந்திருந்தார்.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஆணைக்குழுவில் நேற்று (01) முன்னிலையாகி சாட்சியம் வழங்கிய போதே அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும்,'2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி ரவீந்திர குணவர்த்தன என்னை கொலை செய்ய இரு கடற்படை வீரர்களை 9 எம்எம் துப்பாக்கிகளுடன் கோட்டையில் உள்ள எனது வீட்டுக்கு அனுப்பினார்.

இதன்போது சட்டரீதியாக ஆயுதம் தரித்த பாதுகாப்பு அதிகாரிகள் இருந்ததால் தப்பித்துக் கொண்டேன்.' – என குறிப்பிட்டுள்ளார்.

No comments