கொரோனாவைக் கொல்லும் புதிய முகக்கவசம் - சுவிஸ் நிறுவனம் கண்டுபிடிப்பு!


கொரோனா வைரசை கொல்லும் வகையில் புதிய சுவாசக் கவசம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக சுவிட்சர்லாந்தின் ஜக்  நகரில் அமைந்துள்ள லிவிங்கார்டு டெக்னாலஜி தெரிவித்துள்ளது.

அந்நிறுவனத்தின் உரிமையாளர் சஞ்சீவ் சுவாமி மேலும் தகவல் வெளியிடுகையில்:-

துணிகளை கிருமிநீக்கம் செய்யப் பயன்படுத்தப்படும் எங்களின் தொழில்நுட்பம் கொரோனா வைரஸையும் கொல்வதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவாசக் கவசங்களைச் செய்யும் சோதனை முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

சுவாசக் கவசம் செய்யப்பட்ட துணியின் மேற்பரப்பில் ஒரு நேர்மறை மின்னோட்டத்தை ஏற்படுத்துகின்றது. அதனால் கிருமிகள் இந்த சுவாசக்கவசத்தின் மேற்பரப்பைத் தொடும்போது. கிருமிகளின் செல் எதிர்மறை மின்னோட்டம் கொண்டதால் அவை அழிக்கப்படுகின்றன.

எங்களின் சுவாசக்கவசங்கள் மீண்டும் மீண்டு துவைத்துப் பயன்படுத்தாம். குறிப்பாக 210 தடவைகள் துவைக்கலாம். 

சுகாதாரம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும். எங்கள் முகமூடிகள் நவீன உலகிற்கு ஏற்ற சுகாதாரத்தை வழங்குகின்றன. எங்களுக்கு உண்மையிலேயே உற்சாகமான விடயம் என்னவென்றால், இந்த தொழில்நுட்பம் அன்றாட பயன்பாடுகளுக்கு, விமான இருக்கைகள் மற்றும் பொது போக்குவரத்து போன்ற பயன்பாடுகளுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் நமது மக்களைப் பாதுகாக்கிறது. இதன் மூலம் மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். என்றார்.

லிவிங் கார்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முகமூடிகள் ஏற்கனவே சிங்கப்பூர், ஜப்பான், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் உள்ள சட்ட அமலாக்க மற்றும் முன்னணி தொழிலாளர்களால் பயன்பாட்டில் உள்ளன.

No comments