இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கப்பல்!


இந்தியாவில் சிக்குண்டிருந்த இலங்கையரை விசேட விமான மூலம் இலங்கை அரசு அழைக்க வடக்கு கிழக்கில் தங்கியிருந்த இந்தியர்கள் அனைவரும் கொழும்பில் இருந்து இந்தியாவிற்கு இன்று கப்பல் மூலம் புறப்பட்டுள்ளனர்.


இந்தியாவில் இருந்து கொழும்பிற்கு தருவிக்கப்பட்ட கப்பலில் 700  பேர் பயணிக்கும் வசதி கொண்ட நிலையில் இன்று காலை கொழும்பில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்மிற்கு பயணித்துள்ளது.

இவ்வாறு பயணிக்கும் கப்பலில் இந்தியாவில் இருந்து பல்வேறு தேவைகளிற்காகவும் இலங்கை வந்த நிலையில் கொரோனா காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டதனால் நாடு திரும்ப முடியாத 700  பேர் பயணிக்கின்றனர்.

தூத்துக்குடி துறை முகத்திற்கு பயணிப்பதனால் அதிகமானோர் தமிழர்களே பயணிக்கும் நிலையில் வடக்கில் தங்கியிருந்த 224 இந்தியர்களும் கிழக்கு மாகாணத்தில் தங்கியிருந்த 195 பேரும் இலங்கையினை விட்டு வெளியேறியுள்ளனர்.

No comments