முஸ்லீம்கள் மீது இன அழிப்பு: மீண்டும் சுமந்திரனின் அஸ்மின்?


முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது இனச்சுத்திகரிப்பென்ற சுமந்திரனின் வாதத்துடன் மீண்டும் அவரது எடுபிடி அஸ்மின் களமிறங்கியுள்ளார். இனச்சுத்திகரிப்பு என்கின்ற மிகப்பெறும் அநீதியிழைக்கப்பட்ட சமூகத்தின் மீதான வெறுப்பும் பகைமையும் ஒரு போதும் நீங்கவில்லை.மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் விடயத்தில் காட்டப்படும் இதே தீவிரம், வன்னியில் பதியப்பட்டுள்ள சிங்கள மக்கள் மீதோ, அல்லது வலிகாமம், வடமராட்சி போன்ற பிரதேசங்களில் பதியப்பட்டுள்ள தமிழ் மக்களின் விபரங்களிலோ காட்டப்படுவதில்லையென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்ஸிற்கு எதிராக கம்பு சுற்றியுள்ளார் அஸ்மின்.

மன்னார் மாவட்டத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கைக்காக பதிவில் உள்ள மக்களில் பலர் புத்தளத்திலும் பதிவினை வைத்துள்ளனர் என்கின்ற நீண்டநாள் சந்தேகம் கொவிட் -19ன் நிவாரண நிதியான 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு பட்டியல் மூலம் மேலும் வலுப்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர. இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்திருந்தார்.

மன்னார் மாவட்டத்தை சொந்த இடமாக கொண்டு 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசிக்கும் முஸ்லீம் மக்கள் கோவிட் 19னால் பாதித்த மக்களிற்கு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா நிவாரண நிதி தங்களிற்கும் வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இவ்வாறு புத்தளழ்தில் வசிக்கும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்து 571 குடும்பங்களிற்கு குறித்த நிதி வழங்கும் வகையில் இரு நாட்களாக மன்னார் மாவட்ட செயலாளரின் ஏற்பாட்டில் வங்கி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறு 2 ஆயிரத்து 571 பேருக்கான ஏற்பாடுகள் மேற்கொண்ட நிலையில் ஆயிரத்து 508 பேர் மட்டுமே வங்கி கணக்குகளை ஆரம்பிக்கும் பணிக்காக சமூகமளித்திருந்த நிலையில் ஆயிரத்து 63 குடும்பங்கள் குறித்த நிதியை பெறுவதற்காக விண்ணப்பித்து கணக்குகளை ஆரம்பிப்பதற்கு சமூகமளிக்கவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு ஓர் நிவாரண நிதியை பெறும் பதிவிற்கே சமூகமளிக்கவில்லை எனில் அவ்வாறானவர்கள் அங்கும் வசிக்கின்றனரா அல்லது நிரந்தரமாக புத்தளம் மாவட்டத்துடன் இணைந்தபோதும் மன்னாரில் முஸ்லீம்களின் வாக்கு எண்ணிக்கைக்காக பதிவு மட்டும் பேணப்படுகின்றதா என்பதனை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

அவ்வாறு அதனை உறுதிப்படுத்த முடியாது விடின் இவ்வாறு மாறுபட்ட தன்மை காணப்படும் ஆயிரம் குடும்பங்களின் விபரங்கள்; பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அதன் மூலமே அரச அதிகாரிகள் மீது மக்களிற்கு நம்பிக்கை அதிகரிக்கும். இவைகளை மேற்கொள்ள முடியாதுவிடத்தில் குறித்த ஆயிரம் விபரங்களையும் புத்தளம் மாவட்டச் செயலாளருக்கு அனுப்பி இவை தங்கள் மாவட்டத்தில் பதிவில் உண்டா என்பதனை உறுதி செய்ய மாவட்டச் செயலாளர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சாள்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments