முகமாலையில் மேலும் மனிதவன்கூட்டு தொகுதிகள்?


கிளிநொச்சி- முகமாலை முன்னரங்க போர் பகுதியில் இன்று 2ம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டிருந்த அகழ்வு பணிகளின்போது மேலும் ஒரு மனித எலும்பு கூடு மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றது. 


கடந்த மாதம் 22ம் திகதி முகமாலை பகுதியில் கண்ணிவெடியகற்றும் பணிகளின்போது தொகுதி தொகுதி மனித எலும்பு கூடுகள் மற்றும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து கடந்த 26ம் திகதி அகழ்வு மேற்கொள்ளப்பட்டு அங்கியிருந்து ஆயுதங்கள் மற்றும் பெண் போராளி ஒருவருடையதென சந்தேகிக்கப்படும் மனித எலும்பு கூடு மீட்கப்பட்டிருந்த நிலையில், 

2ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட 2ம் கட்ட அகழ்வு பணிகள் இன்று இடம்பெற்றது. இதன்போது மேலும் ஒருவருடைய எலும்பு கூடு மற்றும் பச்சை நிற சீருடை, ரவை கூடுகள், துப்பாக்கி ரவைகள், மோட்டார் குண்டு  தகடு, குப்பி ஆகியன மீட்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் 3ம் கட்ட அகழ்வு பணிகள் 9ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. 

No comments