ஆகஸ்ட் 8 தேர்தல்?தேர்தல் தொடர்பான மனுக்களை உயர்நீதி மன்றம் எடுத்துக் கொள்ள முடியாது என இன்று நிராகரித்துள்ள நிலையில்  நாளை காலை அது குறித்து தேர்தல் ஆணைக்குழு கூடி  பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான தீர்மானங்களை எடுக்கவுள்ளது. ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்துக்கு சமூகமளிப்பார்கள் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அடுத்த கூட்டத்தை எதிர்வரும் எட்டாம் திகதி கூட்டுவதென இன்று (02-06-2020) காலை ஆணைக்குழு கூடிய போது தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இன்று மாலை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நாளைக் காலை மீண்டும் ஆணைக்குழு கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் குறித்து முடிவுகள் அப்போது எடுக்கப்படும் என தலைமை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் பெரும்பாலும் எதிர்வரும் ஆகஸ்ட் 8 அல்லது 10 திகதி நடத்தப்படலாம் என உள்ளக வட்டாரங்கள் தெரிக்கின்றன

No comments