மன்னாரில் 6 பேர் புலனாய்வாளர்களால் கைது!Mannarதமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகு மூலம் இருவரை அழைந்து வர உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 6 பேரை புலனாய்வாளர்கள் கைது செய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த இரண்டு பேர் மடு காவல்நிலையத்தில் சரணடைந்திருந்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து பேசாலை மற்றும் வங்காலை பகுதிகளைச் சேர்ந்த 6 பேரை இராணுவத்தின் உதவியுடன் இன்று வெள்ளிக்கிழமை (5) புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

இவ்விருவரும் மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் பயன்படுத்திய படகு மற்றும் படகுகின் வெளி இணைப்பு இயந்திரம் போன்றவற்றை காவல்துறையினர் துள்ளுக்குடியிறுப்பு கடற்கரையில் இருந்து மீட்டுள்ளனர்.
mannar

Mannar
No comments