ஜயாயிரமாம்:கொரோனா ஜயாயிரமமாம்!


தமிழ்நாட்டில் கொரோனா மரணங்கள் தலை தூக்கியுள்ள நிலையில் அங்கிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகு மூலம் இருவரை அழைந்து வர உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அறுவரை மன்னாரில் வைத்து கைது செய்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த இரண்டு பேர் மடு காவல்நிலையத்தில் சரணடைந்திருந்தனர்.அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து பேசாலை மற்றும் வங்காலை பகுதிகளைச் சேர்ந்த 6 பேரை இராணுவத்தின் உதவியுடன் இன்று வெள்ளிக்கிழமை (5) காவல்துறை புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதனிடையே கொரோனா சந்தேகத்தின் பேரில் 5000 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

45 தனிமைப்படுத்தல் நிலையங்களில் இவர்கள் கண்காணிக்கப்படுவதாக இராணுவத் தளபதி கூறினார்.

இதுவரை 11,709 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டதன் பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 1800 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அவர்களில் 409 பேர் சமூகத்தில் இருந்து தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள்.

இலங்கை கடற்படையை சேர்ந்த 836 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 551 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

No comments