பசுவை இறைச்சிக்காகத் திருடும் கூட்டம் கையும் களவுமாகப் பிடிபட்டது!

மன்னார் அடம்பன் மினுக்கன் கிராம அலுவலகர் பிரிவுக்கு உற்பட்ட  முள்ளிக்கண்டல் பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு என வழங்கப்பட்ட நிறை மாத பசு ஒன்று திருடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டு பங்கிடப்பட்டமை தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இன்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அடம்பன் காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென் காவல்துறையினர் திருடப்பட்ட நிறை மாத பசுவை இறைச்சிக்காக வெட்டி பங்கிட்ட நிலையில் குறித்த நபர்களை கைது செய்துள்ளனர்.

மன்னார் அடம்பன் பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்துக்கு என வழங்கப்பட பசுக்கள் தொடர்சியாக திருடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட நபர்கள் அடம்பன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு  வெட்டப்பட்ட நிறைமாத பசுவின் இறைச்சி மற்றும் பசுவின் வயிற்றில் இருந்த கன்று போன்றவை   அடம்பன் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

திருடப்பட்டு வெட்டப்பட்ட நிறைமாத பசு இன்னும் சில தினங்களில் கன்றை ஈனுவதற்கான நிலையில் காணப்பட்டதோடு,சுகாதார வைத்திய அதிகாதிகளிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் குறித்த பசு இறைச்சிக்காக வெட்டப்படுள்ளமை தெரிய வந்துள்ளது.

No comments