வீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா?

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு, மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அநுராதபுரம்- கெபித்திகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய மேற்படி பெண், குவைட்டிலிருந்து நாடு திரும்பியிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.
இந்நிலையில், ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், பூரண குணமடைந்த நிலையில் விடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீடு சென்ற பின்னர் நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

No comments