மீண்டும் ஒத்திகை?

இலங்கை நாடாளுமன்ற தேர்தலிற்காக தெரிவுசெய்யப்பட்ட  சில மாவட்டங்களில் தேர்தல் ஒத்திகை நிகழ்வு இன்று (13) நடைபெறவுள்ளது.

இதற்கமைய, கம்பஹா, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் தேர்தல் ஒத்திகை நிகழ்வு நடைபெறவுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதித் தேர்தல் ஆணையாளர்கள், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். 
கொவிட் 19 பரவலுக்கு மத்தியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, வாக்களிப்பில் எவ்வாறு கலந்துகொள்வது என்பது குறித்த தெளிவூட்டலை வழங்கும் நோக்கில் இந்த ஒத்திகை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது ஒத்திகை நிகழ்வு கடந்த 07 ஆம் திகதி, அம்பலாங்கொடையில் நடைபெற்றது. 

No comments