தேர்தலுக்கு 75 கோடி முற்பணம்?

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளுக்காக 75 கோடி ரூபா நிதியை பெற்றுத் தருமாறு தேர்தல் ஆணைக்குழு திறைசேரியிடம் நேற்று (11) கோரியுள்ளது.
தேர்தல் செலவீனங்களுக்காக இதுவரை 50 கோடி ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக வாக்குசீட்டு அச்சிடும் நடவடிக்கைகளுக்காக அரச அச்சு திணைக்களத்திற்கு நிதித் தொகையொன்றை ஒதுக்கீடு செய்யவும் எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இதேவேளை நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கு சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள் தனியார் நிறுவனமொன்றிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், உத்தியோகபூர்வ வாக்கு சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக 575 கோடி ரூபா நிதி செலவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என தேர்தல் ஆணைக்குழு அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

No comments