யாழில் பெருகும் வாள் வெட்டு வீரர்கள்!


யாழ்.குடாநாட்டில் மீண்டும் வாள் வெட்டு சண்டைகள் மும்முரமடைந்துள்ளன.

தென்மராட்சி, கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டி பகுதியில் இன்று (07) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் வரை சென்ற பழைய பகையின் பின்னணியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே நீடித்து வந்த மோதலே தற்போது எரிப்பு,தீவைப்பென பரிணமித்துள்ளது.

No comments