ஜந்து வருடமும் காவல்துறை பாதுகாப்பில் மக்கள் சேவை!


இலங்கையில் முதலமைச்சர்களிற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் அப்போதைய வடமாகாண் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

எனினும் அவரது அமைச்சர்கள் தமது காவல்துறை பாதுகாப்பினை நிராகரித்திருந்த நிலையில் தீவிர கூட்டமைப்பின் இளம் தலைவர்கள் திருட்டுத்தனமாக காவல்துறை பாதுகாப்பினை பெற்றிருந்ததை யாழ்.மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் அம்பலப்படுத்தியுள்ளார்.

இதன் பிரகாரம் 2013முதல் 2018 வரையாக கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சி சார்பு உறுப்பினராக இருந்த சுகிர்தன்,டெலோ சார்பு உறுப்பினரான விந்தன்,புளொட் சார்பு உறுப்பினரான கஜதீபன் ஆகியோர் ஜந்து வருடங்கள் காவல்துறை பாதுகாப்பிலேயே மக்கள் சேவை ஆற்றியிருந்தமை தெரியவந்துள்ளது.

இதேவேளை மகிந்த தரப்பினை சேர்ந்த  பங்காளியான முருகேசு சந்திரகுமார் மற்றும் கனடாவிற்கு தப்பி சென்று அகதி அந்தஸ்து பெற்றுள்ள அஸ்மினும் இவ்வாறு பாதுகாப்பு பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments