கோதாவுடனும் கூட்டமைப்பு டீல் - அனந்தி

கூட்டமைப்பை முற்று முழுதாக அரசியல் அரங்கில் இருந்து விரட்ட வேண்டும் என்று நாம் நினைத்ததில்லை. அவர்கள் பிழையான பாதையில் பயணிக்கின்ற பொழுது, சரியாக வழிநடத்தவேண்டிய தேவையும் கடைப்பாடும் மக்களுக்கும் எங்களுக்கும் உண்டு. அந்தவகையில் இந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் மக்களுக்கு விரோதமாக தொழிற்பட்டு கொண்டிருக்கின்ற கூட்டமைப்பினருக்கு  சரியான பாடம் கற்பிக்கப்படும் என ஈழ மக்கள் சுயாட்சிக் கழக செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களினுடைய  அபிலாசைகளுக்கு விரோதமாக தங்களுடைய சுய நல இலாபம் கருதிய அரசியல் போக்கை கொண்டிருப்பதனால், அந்த கட்சிக்கு மாற்று கட்சியாக நாங்கள் கூட்டாக  பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கி இருக்கின்றோம். எங்களுடைய என்னப்பாங்கானது ஒட்டுமொத்தமாக இன அழிப்புக்கு ஆளான மக்களுடைய அபிலாசைகளை வென்றெடுக்க கூடியதாக அமையும்.

கூட்டமைப்பை முற்று முழுதாக அரசியல் அரங்கில் இருந்து விரட்ட வேண்டும் என்று நாம் நினைத்ததில்லை. அவர்கள் பிழையான பாதையில் பயணிக்கின்ற பொழுது, சரியாக வழிநடத்தவேண்டிய தேவையும் கடைப்பாடும் மக்களுக்கும் எங்களுக்கும் உண்டு. அந்தவகையில் இந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் மக்களுக்கு விரோதமாக தொழிற்பட்டு கொண்டிருக்கின்ற கூட்டமைப்பினருக்கு  சரியான பாடம் கற்பிக்கப்படும்.

அடுத்து வருகின்ற காலங்களில் விடுதலைப் புலிகளால்  உருவாக்கப்பட்ட  கூட்டமைப்பு சரியான பாதையில் பயணிப்பதற்கு நாங்கள் நிச்சயமாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி அவர்களை சரியான பாதைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார்.

 அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இனவாதிகளை கோத்தாபய அடக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். நான் நினைக்கிறேன் அவர் இனவாதிகள் என கூறுவது விமல் வீரவன்ச போன்றவர்களாகவும் இருக்கலாம் சில வேளைகளில் அவர் ஜனாதிபதியை  கூட இனவாதி என கூறுவதாக   இருக்கலாம். எனில் அவரும் இனவாதமான போக்கில் செல்கின்றபடியினால் சம்பந்தர் மிக துணிச்சலாக  தெரிவித்திருக்கலாம் என நினைக்கிறேன்.

கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு தளபதியாக இருந்திருக்கிறார். அவர் செய்த துரோகத்தனம் ஒரு இனம் அழிவதற்கு வழிகோலி விட்டது. ஒரு இனம் முற்றுமுழுதாக இன அழிப்புக்கு ஆளாவதற்கு வழிகோலிய ஒரு துரோகத்தனத்தை செய்துவிட்டார். அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அனால்  விடுதலைப் புலிகளுடைய காலத்தில்  கருணா தளபதியாக இருந்து  யுத்தத்தை நடத்தி அதில் 3000 இராணுவத்தினரை கொன்றேன் என கூறியதற்கு நடவடிக்கை எடுப்பது பற்றி கூறுவது  ஒரு இனம் தன்னை பாதுகாப்பதற்காக ஒரு ஆயுத போராட்டத்தை  நடத்தியதை பிழையாக காட்டுவதாக பார்க்கலாம் என்றார். 

மேலும், நாங்கள் மக்களின் அபிலாசைகளுக்கு  விரோதமாக நடக்க மாட்டோம். 2009ற்கு பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மகிந்தவோடு இணக்கப்பாட்டிலேயே இருந்தார்கள். பின்னர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் ஜனநயாக இடைவெளியோடு இணைந்து இருந்தாலும் எந்தவொரு தீர்வினையும் பெற்றுக்கொடுக்கவில்லை. தற்போது கோத்தாபய ஆட்சியில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவதற்கு தாங்கள் ஆதரவு கொடுக்கலாம் என கூட்டமைப்பு உறுப்பினர் கருத்து தெரிவித்திருப்பது என்பது அவர்களின் சுயலாபங்களுக்கானது. என நான் நினைக்கிறேன். தற்போதைய அரசாங்கத்தோடும்  கூட்டமைப்பினர் டீல் பேசியிருக்க கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments